Movies running city's

பாக்சிங்கில் பட்டையை கிளப்பும் ஸ்ருதிஹாசன் ! வைரல் வீடியோ


தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

 

அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.

OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.தமிழில் சில படங்கள் நேரடியாக வெளியானதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீபத்தில் 11 ஆண்டுகள் நிறைவடைந்தற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடீயோவை வெளியிட்டிருந்தார் ஸ்ருதி.இதனை தொடர்ந்து தற்போது தனது பாக்ஸிங் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *