Movies running city's

சுஷாந்த் சிங் மரணம்: ரியாவுக்காக மெளனம் கலைத்த பாலிவுட், பதுங்கும் கோலிவுட்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபொர்த்தி மீது சிபிஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புத்துறையின் விசாரணை இறுகுவதாக கருதப்படும் நிலையில், ரியாவுக்கு ஆதரவாக பல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கோலிவுட்டில் அரிதாகவே அந்த வழக்கு குறித்தும் ரியாவின் நிலை குறித்தும் பேசுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் மனநிலையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள திரைப்பிரபலங்கள் சிலரை தொடர்பு கொண்டு பிபிசி பேச முயன்றது. ஆனால், பலரும் விசாரணை நடந்து வருவதாகக் கூறி தட்டிக்கழித்த வேளையில், பிபிசியிடம் பேசிய நடிகை கஸ்தூரி மட்டும், “வழக்கு நடந்து கொண்டிருப்பதால் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

வேறு நடிகைகளோ, நடிகர்களோ, திரை பிரபலங்களுக்காக வழக்கமாக குரல் கொடுப்பவர்களோ இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை.

மெளனம் கலைந்த பாலிவுட்

இந்த வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கும் வேளையில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரியா சக்ரபொர்த்தியை ஏதோ ஒரு குற்றிவாளி போல ஊடகங்கள் சித்தரிக்க முற்படுவதையும், இழிவுபடுத்த முயல்வதையும் பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாகிறது என்று பாலிவுட் திரைநட்சத்திரம் வித்யாபாலன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை லக்ஷ்மி மஞ்சு தமது டிவிட்டர் பக்கத்தில் ரியாவுக்கு எதிரான இழிவுபடுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த திரைத்துறை விழித்தெழ வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை வித்யா பாலன் அவரது பதிவுக்கு அனுப்பிய பதிலில், “இந்த விஷயத்தை உரத்துக் குரல் கொடுத்த உங்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதங்கள். நேசமிகு இளைய நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் துயரத்தை ஏற்படுத்தும் அதே நேரம் அவர் ஊடக சர்க்கசாகியிருப்பது துரதிருஷ்டவசமானது.

 

 

 

அதே நேரம் ஒரு பெண்ணாக ரியா சக்ரபொர்த்தியை இழிவுபடுத்துவதை பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாக இருக்க வேண்டாமா அல்லது நிரபராதியாக நிரூபிக்கப்படும்வரை குற்றவாளியாக இப்போது கருதப்படுகிறதா? குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காவது நாம் சிறிது மதிப்பளித்து சட்டம் அதன் கடமையை செய்ய அனுமதிப்போம்” என்று கூறியிருந்தார்.

இதேபோல, ரியா சக்ரபொர்த்தியின் நீண்ட கால தோழியான சிபானி தண்டேகரும் நான் உன்னுடனேயே இருக்கிறேன் #JusticeforRhea என்று குறிப்பிட்டு தமது கருத்தை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் ரியா சக்ரபொர்த்திக்கு ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்யத்தொடங்கினார்கள்.

மற்றொரு பிரபல நடிகையும் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தவருமான டாப்சீ பன்னு, எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாத அல்லது ரியாவை தெரியாது. ஆனால், எனக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால், அது நீதித்துறையை முந்திக்கொண்டு ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் முன்பே அவரை குற்றவாளியாக்கப்படுவதை புரிந்து கொள்ள மனிதம் மட்டுமே தேவை. உங்களுடைய புனிதத்துக்காகவும் இறந்தவரின் புனிதத்துக்காகவும் சட்டத்தை நம்புகங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மதம் ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.

சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக மும்பை நகர காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பிஹார் காவல்துறை பதிவு செய்த வழக்கை அம்மாநில அரசு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதிசெய்தது.

முன்னதாக, சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும் பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபொர்த்து மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். சுஷாந்தின் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரது பணத்தை அவரது முன்னாள் தோழி ரியா அபகரித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் ஊடகங்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு ரியா சக்ரபர்த்தி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்தார் . பின்னர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு நேர்காணல் அளித்தார்.

Source: BBC

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *