Movie Review

ஜோதிகா, Jyothika

நூற்றாண்டுகள் கடந்திருக்கும் தமிழ் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிற அந்தஸ்த்தைப் பிடித்திருக்கிறது 'பொன்மகள் வந்தாள்.' தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு வந்திருக்கும் படமான ஜோதிகாவின் இந்தப் 'பொன்மகள் வந்தாள்' எப்படியிருக்கிறது?

* குற்றம் நடந்தது என்ன? டைப் கோர்ட் ரூம் டிராமாதான் படம். ஊருக்குள் வரும் வடநாட்டு சைக்கோ கொலைகாரி குழந்தைகளை கொல்வதோடு, தடுக்க வந்த இரண்டு பேரையும் சுட்டுக்கொள்கிறாள் எனப் பரபரப்பாகிறது உதகமண்டலம். உடனடியாகக் களத்தில் இறங்கும் போலீஸ் சில குழந்தைகளின் உடலைக் கைப்பற்றி, சைக்கோ கொலைகாரியை என்கவுன்டர் செய்து கேஸை முடிக்கிறது. 2004-ம் ஆண்டு நடக்கும் இந்தச் சம்பவத்தின் உண்மையை 2019-ல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து உண்மைகளை உடைக்கிறாரா ஜோதிகா என்பதுதான் படத்தின் கதை.

* கோர்ட் ரூம் டிராமா பாணி கதையில் எதிர்த்தரப்பும் எக்கச்சக்க எனர்ஜியோடு இருந்தால் மட்டுமே விறுவிறுப்பு சாத்தியம். பார்த்திபன் படத்தின் அப்படியான எனர்ஜி பூஸ்டர். உணர்ச்சிபூர்வமான காட்சியை ஒற்றை என்கவுன்டரில் காலி செய்வது, உண்மையை மழுப்பும் வில்லன் தரப்பிடம் கோபத்தைக் கொட்டுவது என டெம்ப்போவைத் தக்கவைப்பதில் முக்கியப் பங்கு அவருக்கே!
* 15 ஆண்டுகளுக்கு முன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண் சீரியல் கில்லரின் வழக்கை ஒரு பெண் வழக்கறிஞர் தோண்டியெடுத்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவது என்ற சுவாரஸ்ய ஒன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பின் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு வாழும் சாட்சிகளாக மாறிப்போவது என நடைமுறை நிகழ்வுகளைப் புகுத்தி ஒரு வலிமையான கருத்தைச் சொன்னதற்காக இயக்குநர் ஃப்ரெட்ரிக்குக்குப் பாராட்டுகள்.
Source Vikatan : https://cinema.vikatan.com/tamil-cinema/jyothikas-ponmagal-vandhal-movie-plus-minus-report

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *