`கொரோனா கத்துக்கொடுத்த பாடம்… இயற்கை விவசாயம் செய்யப்போறேன்!’ – நடிகர் செந்தில்

“என்னை நடிகராத்தான் மக்களுக்குத் தெரியும். உண்மையில் நான் விவசாயி. எங்க குடும்பம் விவசாயக்குடும்பம். பல வருஷமா இயற்கை விவசாயம் செய்திருக்கேன். இந்த விஷயம் பெரிசா யாருக்குமே தெரியாது.

இப்போ விவசாய வேலைகள் குறைஞ்சிருக்குதே தவிர, அதை முற்றிலுமா கைவிடலை. திரும்பவும் விவசாயத்தில தீவிரமா இறங்கப்போறேன்.” – யதார்த்தமாகப் பேசுகிறார் நடிகர் செந்தில்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த செந்தில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் வசித்துவருகிறார். சத்தமில்லாமல் 23 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்திருக்கிறார். 2016-ல் சென்னையைத் தாக்கிய வர்தா புயலால், செந்திலின் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது, மீண்டும் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக இறங்கப்போவதாகச் சொல்கிறார்.

“என் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஊர்ல முழுநேரமா விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தேன். சினிமாவுக்கு வந்தபிறகும் விவசாயத்தோட தொடர்பு இருந்துச்சு. 1990-களில் என் சினிமா பயணம் மிகச் சிறப்பா இருந்துச்சு. அந்தத் தருணத்துல சினிமாவுல சம்பாதிச்ச பணத்துல சென்னைக்குப் பக்கத்துல இருக்கிற படப்பையில அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கினேன்.

நடிகர் செந்தில்

Full source Vikatan : https://www.vikatan.com/news/agriculture/actor-senthil-speaks-about-his-organic-farming-experience

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *